• Apr 24 2025

ஓடிப்போன காதலியை மீண்டும் தேடியலையும் மனோஜ்.. ரோகிணிக்கு ஆப்பு! சிறகடிக்க ஆசையில் புதிய திருப்பம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் வித்தியாசமான கதைக் களத்தில் இது நகர்வதால் ரசிகர்களும் இதற்கு அடிமையாக காணப்படுகிறார்கள்.

இந்த சீரியலில் தற்போது கோபத்தில் வீட்டுக்கு வராமல் இருந்த ஸ்ருதி- ரவி மீண்டும்  வீட்டுக்கு வந்து விட்டார்கள். ஆனாலும் ஸ்ருதியை குழப்பும் வகையில் ரோகிணி நடந்து கொண்டாலும் இறுதியில் அவருக்கு பல்பு தான் கிடைத்தது.

மறுபக்கம் விஜயாவுடன் சேர்ந்து முத்து வாங்கி கொடுத்த பூக்கடையை கார்ப்பரேஷன் கம்பெனியில் சொல்லி முற்றாக தகர்த்து எடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி மீனா மன வேதனையில் அழுவதை பார்த்து கொஞ்சம் கூட ஈவிறக்கம் இன்றி சிரித்து கொண்டாடுகிறார்கள்.


இந்த நிலையில், நாளைய எபிசோட்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், மனோஜ் ஏற்கனவே 27 லட்சம் அடித்து விட்டு ஓடி போனதாக வீட்டில் பேசப்பட்டு வந்த நிலையில், அந்த காசை மீண்டும் எப்படியாவது எடுக்க வேண்டும் என மனோஜ்க்கு ஐடியா கொடுக்கிறார் ரோகினி.


அதன்படி ஒரு இடத்திற்கு சென்று அங்கு மனோஜ் தனது முன்னாள் காதலியை பற்றி விசாரிக்கிறார். இதன்போது மனோஜின் முன்னாள் காதலியின் போட்டோவை காட்டி விசாரிப்பது போன்ற ப்ரோமோ இன்றைய தினம் காட்டப்பட்டது.

எனவே இதற்கு அடுத்து வரும் நாட்களில் மனோஜின் எக்ஸ் காதலி  மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ரோகிணி மனோஜ்க்கு இடையில் விரிசல் ஏற்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement