இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான 'பவுனு பவுனுதான்' என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
குறிப்பாக 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான 'தனிமை' படத்தில் நடித்திருந்தார்.வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் கவனம் பெற்றன.
கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.இருப்பினும் எதிர்பாராத விதமாக இந்த மாதம் 23ம் தேதி உயிரிழந்தார்.
இவரது மறைவு திரையுலகப் பிரபலங்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போண்டாமணி குறித்து நடிகர் பாவா லக்ஸ்மன் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.
அதில் அவர் போண்டாமணியின் ஆசையை பிள்ளைகளைக் கொண்டு போய் இலங்கையில் விடனும், அங்கையே செட்டிலாகிடனும் என்பது தான் அவரோடை ஆசை. அது தான் நடக்காமல் போய் விட்டது. சூட்டிங் இல்லாவிட்டால் கூட எங்களுக்கு காசு கொடுத்து உதவி செய்வது அவர் தான் என்றும் மனம் உருகக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!