• Apr 30 2024

ஜெயம் ரவியின் படத்தில் தனுஷா...? எந்த கட்டத்தில் வந்திருப்பாரு....?

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருபவர். இவரின் அறிமுகப் படம் ஜெயம் ஆகும். முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் ஜெயம் என்னும் பெயரை தனது பெயருடன் சேர்த்து “ஜெயம் ரவி” என சினிமா உலகில் வலம் வருகிறார்.


இந்த படத்தைத் தொடர்ந்து நிமிர்ந்து நில், பூலோகம், பேராண்மை, எங்கேயும் காதல், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், அடங்கமறு மேலும் பல ஹிட் படங்களை கொடுத்தாலும். ஜெயம் ரவி கேரியரில் மிகப்பெரிய ஒரு படமாக பார்க்கப்பட்டது 2004 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான “எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி” திரைப்படம் தான்.


இந்தப் படத்தில் ஜெயம் ரவி உடன் இணைந்து அசின், பிரகாஷ்ராஜ், விவேக், நதியா, ஜனகராஜ், சுந்தர், வையாபுரி என மிகப் பெரிய திரைபட்டாளமே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு செம்மையாக இசையமைத்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்தது.


இந்த படம் ஆக்சன், சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்து ஒரு படமாக இருந்ததால் வெளிவந்து ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்து அவர்கள் பக்கம் இழுத்தது. இதனால் இந்த படம் ரொம்ப நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது ஒட்டுமொத்தமாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் சுமார் 54 கோடியை கலெக்ஷன் செய்தது.


இந்த படத்தின் பூஜையில் நடிகர் தனுஷ், ஸ்ரீகாந்த், சத்யராஜ் மகன் உள்பட பலர் கலந்து கொண்டனர் இப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement