• Mar 28 2023

யோகிபாபுவின் கன்னத்தில் முத்தமிடும் விஜய்.. இணையத்தில் வைரலாகும் ஓவியம்.. குவியும் லைக்குகள்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் யோகிபாபு கடந்த 2009-இல் வெளியான 'யோகி' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அமீர் லீட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


தன்னுடைய அறிமுகப் படத்திலேயே பல ரசிகர்களைக் கவர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார்.


காமெடியனாக மட்டுமில்லாமல் மண்டேலா, கூர்க்கா என பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். யோகி பாபு ஒரு நடிகனாக இருந்தாலும் விஜய்யின் தீவிர ரசிகனாகவும் இருந்து வருகின்றார்.


இந்நிலையில் விஜய் அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்கும் வகையில் யோகிபாபு தன்னையும், விஜய்யையும் வைத்து ஒரு படத்தினை வரைந்து, அந்த ஓவியத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதற்கு தமது லைக்குகளை குவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement