• Jan 19 2025

அசோக் செல்வனின் சபாநாயகன் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அசோக் செல்வன்.இவரது நடிப்பில் இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் சபாநாயகன்.எனவே இந்தத் திரைப்படம் எப்படி இருக்கு என்று தற்பொழுது பார்க்கலாம் வாங்க...

கதைக்களம்

நண்பர்களால் சபா என அழைக்கப்படுபவர் ஹீரோ அரவிந்த் [அசோக் செல்வன்]. நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோக் செல்வன், தனது பள்ளி பருவத்தில் ஈஷா என்ற பெண்ணை காதலிக்க துவங்குகிறார்.நண்பர்கள் உதவியுடன் தனது காதலை ஈஷாவிடம் சொல்ல பல முறை முயற்சி செய்தபோதும், அவரால் சொல்ல முடியவில்லை. இறுதியில் தனது காதலை ஈஷாவிடம் கூறினாரா இல்லையா? அதற்காக அவரும், அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்த்து எடுத்த முயற்சிகள் என்னென்ன, இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.


படம் பற்றிய அலசல்

இயக்குநர் தான் சொல்ல வந்த கதையை சிறப்பாக சொல்லியுள்ளார். மேலும் வழமைபோல அசோக் செல்வனும் இப்படத்தில் சிறப்பாக நடித்து முடித்துள்ளார்.பள்ளி, கல்லூரி அதன்பின் வந்த காட்சிகள் அனைத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். முதல் பாதியில் சற்று தொய்வு, ஆனால் இரண்டாம் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. 

அதே போல இவருடன் நடித்த  கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மெகா ஆகாஷ் அmனைவரும் தம்முடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.


ஹீரோவின் நண்பர்களாக வரும் அருண், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் க்ரிஷ் ஆகியோரின் நடிப்பு கலகலப்பாக இருந்தது. மேலும் மறைந்த நடிகர் மயில்சாமியின் நடிப்பு பக்கா. ஒளிப்பதிவு ஒரு பக்கம் படத்திற்கு பக்கபலமாக உதவினால், மறுபக்கம் எடிட்டிங் சிறப்பாக இருந்தது.

மேலும் சில இடங்களில் நகைச்சுவை ஒர்க்கவுட் ஆகியுள்ளது இதனால் சபாநாயகன் திரைப்படம் இளைஞருக்கு பிடித்த படமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement