• May 20 2024

ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' வசூலில் படுத்ததா..? பறந்ததா..? 3ஆம் நாள் நிலவரம் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

கொம்பன், மருது, விருமன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் முத்தையா. குறிப்பாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான இவரின் இயக்கத்தில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படம் சமீபத்தில் வெளியானது.


இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். அத்தோடு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


கிராமத்து கதையம்சம் கொண்ட படமான இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்நிலையில் இப்படம் வெளியாகி கடந்த மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்தவகையில் இப்படம் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement