• Feb 23 2025

ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட அருண்விஜய்! வருத்தத்துடன் பகிர்ந்த ஷாக் நியூஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்பட்ட விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். இவருக்கு தனி ரசிகர் வட்டாரமே உண்டு.

சினிமாவில் நடிப்பதற்கு முன்வரும் ஒவ்வொரு கலைஞரும் தாம் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரு இலக்கோடு தான் தமது காலடியை துணிவாக எடுத்து வைக்கின்றார்கள்.

அந்த வகையில் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை  அடைவதற்கு அருண் விஜயையும்  கடினமாக உழைக்கின்றார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த ஹீரோ அந்தஸ்து அவருக்கு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.


தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்திக், தனுஷ் ஆகிய நடிகர்ளுக்கு முன்பே  சினிமா துறையில் கால் பதித்தவர் தான் அருண் விஜய். ஆனாலும் அவருக்கென்று சரியான கதை அமையாத காரணத்தினால், கிடைத்த சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பான்மையான படங்கள்  வெற்றி பெறவில்லை என்றே கூறலாம்.

எனினும், அவர் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படம் அவரது வாழ்க்கையை புரட்டி போட்டது.


தற்போது இவர் நடிப்பில் வெளியான 'மிஷன் சப்டர் 1' இந்தத் திரைப்படமும் மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், அருண் விஜய் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

அதன்படி மிஷன் படத்திற்கு ரசிகர்கள் நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு மிக்க நன்றி என்று கேப்சன் போட்டு, அவரது அடிபட்ட காயங்களுடன் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகும் படியான படங்களை பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement