• Jan 19 2025

PR வேலையை ஆரம்பித்த அர்னவ் பேன்ஸ்.. ஆனாலும் ரஞ்சித்துக்கு அமோக சப்போர்ட்.?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.  இதில் பங்கு பற்றுவர்கள் பிரபலத்தோடு கூடிய சினிமா வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கோடு இதில் கலந்து கொள்ளுகின்றார்கள்.

இதுவரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களும் மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை  விஜய் சேதுபதி புதிதாக தொகுத்து வழங்க களம் இறங்கியுள்ளார். அதேபோல இதில் பங்கு கொண்ட போட்டியாளர்களும் அதிரடியாக வரவேற்கப்பட்டார்கள்.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் 24 மணி நேரத்திற்குள் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற டாஸ்கின் அடிப்படையில் முதலாவது ஆகவே மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா கண்ணீரோடு வெளியேறி இருந்தார். இது சமூக வலைத்தள பக்கங்களில் பேசுபொருளானது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளரான அர்னவ் காசு கொடுத்து பிஆர் செட் பண்ணி வைத்துவிட்டு தான் உள்ளே வந்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைகள் எழுந்துள்ளன..


அதாவது கடந்த பிக் பாஸ் போட்டியாளர்களாக காணப்பட்ட மாயா, அர்ச்சனா ஆகியோர் தாம் வெற்றி பெறுவதற்காக வெளியில் பிஆர் வைத்து அதிக ஓட்டுக்களை தம் வசமாகி கொண்டதாக பேசப்பட்டது. 

அதுபோலவே தற்போது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட சீரியல் நடிகர் அர்னவ் தான் ஜெயிப்பதற்காக பி ஆர் வைத்துள்ளார் என்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதில் அர்னவ்காக  போஸ்ட்டை பகிர்ந்தவர்கள் அவருடைய போட்டோவை போடாமல் சக போட்டியாளராக ரஞ்சித்தின் போட்டோவை போட்டு உள்ளார்கள். இதைச் சுட்டிக்காட்டி தற்போது இணையத்தில் ட்ரோல் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement