• Apr 19 2025

13 வருட காதல்..! விரைவில் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

90 களில் முன்னணி நடிகராக இருந்த நடிகர் அர்ஜுன் சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் மாத்திரம் நடித்து வருகின்றார். அண்மையில் இவரது முதல் மகள் நடிகை ஜஸ்வர்யாவிற்கு பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை திருமணம் செய்து வைத்தார்.


இந்த நிலையில் இவரது இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுனிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக பதிவுகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் வெளிநாட்டு மாப்பிளை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் 13 வருடங்கள் காதலித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


தற்போது இவர்களுடைய கல்யாண ஒப்பந்தம் வெளிநாட்டில் நடைபெற்று முடிந்துள்ளதுடன் விரைவில் இந்தியாவில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர். மற்றும் வெளிநாட்டில் அர்ஜுன்  மகள்கள் அனைவரும் சேர்ந்து ஜோடியாக புகைப்படம் எடுத்துள்ளனர். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement