விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் அர்ஜுன் பேரில் சொத்தை மாற்றி எழுதுவதினால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா என ராகினியும் அர்ஜுனும் ஒரு ஜோசியரிடம் சென்று கேட்கின்றனர்.அதற்கு அந்த ஜோசியர் அப்படி ஒன்றுமில்லை என அர்ஜுனுக்கு பாதகமாக சொல்லி விடுகின்றார்.
பின்னர் நமச்சியை வீதியில் கண்டு சொத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி விடப் போகின்றேன் என்று வெறுப்பேற்ற, நமச்சி தமிழிடம் இந்த விஷயத்தை போய் சொல்கின்றார்.
அத்தோடு அர்ஜுன் ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு ராகினியைக் கூட்டிட்டு போய் சைன் பண்ணச் சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. அர்ஜுன் சொத்தை எழுதி வாங்கிருவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!