• May 08 2024

இயக்குநர் பாலா சூர்யாவுடன் மீண்டும் இணையவுள்ளாரா?- அடடே இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே...

stella / 6 months ago

Advertisement

Listen News!

பாலா இயக்கிய நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்த சூர்யா, அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார்.இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது கன்னியாகுமாரியில் நடைபெற்றது.

ஆனால் சில காரணங்களால் இப்படத்திலிருந்து சூர்யா விலகினார்.பாலாவுக்கும் சூர்யாவுக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக சூர்யா படத்தில் வெளியேறிவிட்டார் என கூறப்பட்டது.


சமீபத்தில் பாலாவிடம் நீங்கள் மீண்டும் சூர்யாவுடன் இணைவீர்களா என்று பத்திரிகையாளர் கேட்டார். இதற்கு பாலா, சூர்யா என் தம்பி மாதிரி, கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார். 

மேலும் தற்பொழுது வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்து வருகின்றார். இப்படமானது அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் ரசிகர்கள் நம்பியிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement