• Sep 20 2024

2 படங்களையும் சேர்த்து விற்பனை செய்யப்போகின்றாரா..? ‘வாரிசு’ தயாரிப்பாளர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் ’ஆர்சி 15’ என்ற படத்தையும் அவர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த நிலையில் வாரிசு மற்றும் ’ஆர்.சி 15’ ஆகிய இரண்டு படங்களையும் சேர்த்து வெளிநாட்டு உரிமை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஆஃபரை பல முன்னணி நிறுவனங்கள் வரவேற்று உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்தியாவிலும் அதேபோல் 2 படத்தின்ம் ரிலீஸ் உரிமையும் சேர்த்து விற்பனை செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement