தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்ததாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.
’கோட்’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கி உள்ளதாக அவர் அறிவித்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வெங்கட் பிரபு, விஜய் உள்பட ’கோட்’ குழுவினர் அமெரிக்கா சென்றனர் என்பதும் அங்கு டீஏஜிங் தொழில்நுட்பத்திற்காக ஒரு சில காட்சிகளை மட்டும் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கினார் என்றும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே செப்டம்பர் ஐந்தாம் தேதி ’கோட்’ படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த வாரம் விஜய் தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இன்னொரு படமான ’டிராகன்’ என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அதற்குள் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ’கோட்’ மற்றும் ’டிராகன்’ ஆகிய இரண்டு படங்களின் அப்டேட்களையும் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
Listen News!