• Jan 19 2025

தடுக்கி விழுந்த அஞ்சனா ரங்கன்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா? அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி பிரபலம் அஞ்சனா ரங்கன் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் அவர் தடுக்கி விழும் வகையில் உள்ள காட்சி இருப்பதை பார்த்து இந்த வயதில் இதெல்லாம் தேவையா என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். 

விஜய் டிவி, சன் டிவி உட்பட பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், பல பிரபல நடிகர்கள் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவருமான அஞ்சனா ரங்கன், இன்ஸ்டாகிராமில்  பிரபலம் என்பது தெரிந்தது 

சுமார் ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ள அஞ்சனா ரங்கன் அவ்வப்போது கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும்  அவரது ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவர் அடிக்கடி இதுபோன்ற பதிவுகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் உடை அணிந்து நடந்து வரும் போது தடுக்கி விழுந்து, பேச்சு மூச்சின்றி இருப்பது போன்றும் லவ் என்று முடிவது போன்றும் அந்த வீடியோ முடிவடைகிறது

இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வரும் நிலையில் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்

அஞ்சனா ரங்கன் கடந்த  2016 ஆம் ஆண்டு ’கயல்’ படத்தில் நடித்த சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது அஞ்சனாவுக்கு 34 வயதாகும் நிலையில் டீன் ஏஜ் இளம் பெண் போல் அவர் போட்டோஷூட்களில் கிளாமர் உடை அணிந்து வருவதுதான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.



Advertisement

Advertisement