• Jan 19 2025

மீனாவின் கோபம்.. ராஜிக்கு அடி உதை.. கல்யாணத்திற்குள் ஒரு கலவரம் வந்துடுமோ?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவிடம் அவரது கணவர் மன்னிப்பு கேட்பதும், தனது தாயார் கீழே விழுந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அவருக்கு ராஜி உதவி செய்வதும், ராஜியை அவரது அப்பா மற்றும் அண்ணன் அடித்து வெளியேற்றுவதும், அதை பாண்டியன் கண்டிக்கும் காட்சிகளும் உள்ளன. 

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியல் தற்போது தான் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது என்பதும் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருந்த சரவணனுக்கு ஒரு வழியாக தங்கமயிலை நிச்சயம் செய்து விட்டார்கள் என்பதும் தெரிந்தது. இருப்பினும் தங்கமயில் குடும்பத்தை மீனா சந்தேகப்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் மீனாவை சமாதானம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் கோமதி போகிற போக்கில் ’நீ ஓடி வந்தவள் தானே’ என்று மீனாவை கூற அதனால் மனம் வருந்தும் மீனா தனது கணவரிடம் ’அவங்க சொன்னது கூட பரவால்ல, நீ ஏன் சிரித்தாய்’ என்று சண்டைக்கு போகிறார். அப்போது தான் தவறை உணரும் செந்தில் மன்னிப்பு கேட்கிறார்.



இந்த நிலையில் தான் ராஜி, வாசல் தெளித்து கோலம் போட செல்லும்போது எதிர்த்த வீட்டில் உள்ள தனது அம்மாவை பார்க்கிறார். அப்போது அவரது அம்மா எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விட, அதிர்ச்சி அடைந்த ராஜி அவரை தூக்கி வீட்டுக்கு கைத்தாங்கலாக அழைத்து வந்து காலில் மருந்து போட்டுவிடுகிறார். 

இந்த நிலையில் தான் ராஜியின் அப்பா, சித்தப்பா அண்ணன் ஆகியோர் வந்துவிட அந்த இடமே ஒரே கலவரமாகிறது. ஓடிப்போனவள் எப்படி வீட்டிற்கு வரலாம் என்று ராஜியை அவரது அண்ணன் அடித்தது மட்டுமின்றி கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் காட்சியும் உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடையும் பாண்டியன் அந்த குடும்பத்திடம் சண்டைக்கு செல்ல, இந்த கலகலப்பில் ராஜியின் அண்ணன் பாண்டியனை அடித்து விடுகிறார். அப்போது கதிர் ஓடி வந்து சண்டை செய்ய அந்த இடமே கலவரம் ஆகிறது. 

அதன்பின்னர் ஒரு வழியாக கதிரை கோமதி, மீனா, பாண்டியன் ஆகியோர் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். நீ எதற்காக அங்கு சென்றாய் என்று கோமதி ராஜியிடம் கேட்க எனது அம்மா கீழே விழுந்து விட்டார்கள், அதை எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்? என்று கூற எல்லோரும் அமைதியாக இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது. 

சரவணனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து திருமண தேதியும் குறித்து விட்ட நிலையில் திடீரென பாண்டியன் குடும்பத்தில் ஒரு கலவரம் வந்துள்ள நிலையில் கல்யாணத்திற்குள் இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement