• Jan 19 2025

'விலேச் வைப்' மகளின் ரிசப்சன் தொடர்பில் அனிதாவின் இன்ஸ்டா பதிவு! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி  சென்னை ஈசியாரில் உள்ள கிராண்ட் செனிட்டர் இல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது. 

அதன் பின்பு தியாவும் திலானும் சேர்ந்து தங்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை அவர்களின் யூடுப் தளத்தில் பதிவு செய்திருந்தார்கள்.

இதற்கிடையில் விஜயகுமாரின் மகள் அனிதா டொக்டராக படித்த காலத்தில் தன்னுடன் ஒன்றாக படித்த கோகுலகிருஸ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.


அவரின் சொந்த ஊரில் குடும்பத்தினர் அனைவரும் கோகுலகிருஸ்ணனில் அம்மா, அப்பா தங்கி இருக்கின்ற கிராமத்திற்கு  தியா, திலான் ரிசப்சனுக்காக சென்றுள்ளார்கள்.

அங்கு, தியா, திலானை அவரின்  தந்தை, தாய் வரவேற்பதையும் அனைத்து குடும்பத்தினரும் இணைந்து வரவேற்பதையும் அந்த பலங்கால வீடு வண்ண வண்ண லைட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் சமூக வலைத்தளத்தில் அனிதா விலேச் வைப் என்று பதிவுசெய்திருக்கின்றார்.

தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.



Advertisement

Advertisement