• Sep 20 2024

ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி-பார்த்தாரா இயக்குநர்..?உண்மையை உடைத்த மிஷ்கின்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் பிசாசு. வழக்கமான பேய் படங்களைப் போல் இல்லாமல் இதனை வித்தியாசமாக கையாண்டிருந்தார் இயக்குநர் மிஷ்கின்.

அதனால் இப்படம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது. பிசாசு படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மிஷ்கின்.

பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக  நடித்துள்ளார். இதுதவிர சந்தோஷ் பிரதாப், பூர்ணா, அஜ்மல், நமீதா கிருஷ்ணமூர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.மேலும் இதுதவிர நடிகர் விஜய் சேதுபதியும் இப்படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்து அசத்தி இருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.



அத்தோடு ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பிசாசு 2 படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா 15 நிமிட காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்திருந்தார்.மேலும் இந்த காட்சியை இயக்குநர் மிஷ்கின் நீக்கிவிட்டார்.



இதைப்பற்றி இயக்குநர் மிஷ்கின் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.நிர்வாண போட்டோஷூட் எடுத்து உண்மைதான். அதை எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் பொதுவான நண்பர் போட்டோகிராபர் சுந்தர் என்பவரை வைத்து எடுத்தோம். ஆனால் படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும், இந்த காட்சியை வைத்தால் ஏ சர்டிபிகேட் தான் கொடுப்பார்கள் என பேசி அந்த காட்சி வைக்க வேண்டாம் என முடிவெடுத்தோம்.

'அந்த போட்டோக்களை நான் பார்க்க கூட இல்லை, அதை எல்லாம் நீக்கிவிடும்படி போட்டோகிராபரிடம் சொல்லிவிட்டேன்' என மிஷ்கின் கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement