தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அந்தகன். இந்த திரைப்படத்தை அவருடைய தந்தையான தியாகராஜன் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் நடிகர் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, ஜோகி பாபு என பலரும் நடித்துள்ளார்கள்.
ஹிந்தியில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை பல போட்டிகளுக்கு மத்தியில் தியாகராஜன் அதன் உரிமையை வாங்கி இருந்தார். தனது மகனின் ஐம்பதாவது படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தானே அந்த படத்தை இயக்கினார்.
கிட்டத்தட்ட ஹிந்தியில் 100 கோடி ரூபாய் வரை வசூலித்த இந்த திரைப்படம், தமிழில் அந்தகன் என ரீமேக் செய்யப்பட்டு நேற்றைய தினம் உலக அளவில் வெளியானது. இதுவும் மிகப்பெரிய வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், அந்தகன் படத்தில் முதலாவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 65 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகார்வபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தற்போது வரையில் இந்த திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் பாசிட்டிவாக கூறப்பட்டு வருவதோடு பெரிதாக குறை எதுவும் சொல்லப்படவில்லை என்றே கூற வேண்டும். எனவே இந்த படமும் எதுவரை வசூலில் சாதனை படைக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!