அமீர் நடிப்பில் ஆதம்பாவா இயக்கத்தில் உருவான ’உயிர் தமிழுக்கு’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் மிகவும் கேவலமாக இருப்பதாகவும் அமீருக்கு நடிப்பெல்லாம் தேவையா என்றும் விமர்சனம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
சென்னை சைதாப்பேட்டை எம்எல்ஏ அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்படும் நிலையில் அவரது மறைவிற்கு ஆளும் கட்சி மாவட்ட செயலாளர் தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் இருவருக்கும் இடையே உள்ள முன்பகை என்ன என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை
பொதுவாக அரசியல் படம் எடுக்க வேண்டும் என்றால் நடப்பில் உள்ள அரசியல் கேரக்டர்களை மறைமுகமாக உருவாக்கி அவர்களை கேலியும் கிண்டலும் செய்வது போன்று சில நகைச்சுவை அம்சம் உள்ள வசனங்களை வைத்தும் எடுப்பதுண்டு. அந்த வகையில் அரசியல் சட்டையர் திரைப்படத்தை எடுப்பதில் மணிவண்ணன் வல்லவர் என்பதும் அவரது பாணியில் எடுக்க முயற்சித்து குரங்கு கையில் பூமாலை ஆக இந்த படம் ஆகியிருக்கிறது என்பதுதான் உண்மை
வாட்ஸ் அப் ஜோக்குகளையும் ட்ரெண்டிங் ஜோக்குகளையும் ஆங்காங்கே வைத்து, ஒரு சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளை மட்டுமே சாடும் வசனங்களை வைத்து இயக்குனர் ஆதம்பாவா இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் அரசியல் படம் என்று தொடங்கினாலும் காதல் காமெடி என எந்த நோக்கத்திற்காக படம் ஆரம்பித்ததோ அதை அடையாமல் பல்வேறு திசைகளில் பயணம் செய்து அடிப்படையிலேயே இயக்குனர் தவறு செய்திருக்கிறார் என்பது தெரிகிறது
பருத்திவீரன் என்ற ஒரே ஒரு நல்ல படத்தை மட்டும் எடுத்து இன்றுவரை அந்த படத்தை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அமீருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை என்பது பல காட்சிகளில் தெரிய வருகிறது. மேலும் அவரது கேரக்டரும் வலுவாக அமைக்கப்படவில்லை. ஹீரோயின் கேரக்டர் வலுவாக அமைந்தாலும் அவரது கேரக்டர் அடுத்தடுத்து டம்மி ஆக்கப்பட்டது என்பதும் படத்தில் எந்தவிதமான சுவாரஸ்யமான காட்சிகளும் அவருக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
ஹீரோயின் வீட்டு வாசலில் அமீர் பிரச்சாரம் செய்யும் காட்சி, பொதுக்கூட்டம் நடத்தும் காட்சி ஆகிய ஒரு சில காட்சிகளை தவிர படம் மொத்தமாக போரடிக்கிறது. வித்யாசாகர் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே சரியில்லை.
ஒரு சில நடப்பு அரசியல் குறித்த வசனங்கள் ஓகே என்றாலும் படத்தின் கதையோடு இணையும் வசனமாக இல்லை என்பது படத்திற்கு மிகப்பெரிய இந்த மைனஸ் பாயிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது
மொத்தத்தில் அமீருக்கு நடிப்பு எல்லாம் தேவையில்லாத ஒரு வேலை, அவர் மீண்டும் முடிந்தால் ஒரு பருத்திவீரன் படம் போல் இயக்கலாம், அல்லது திரை உலகை விட்டு விலகி விடலாம்.
Listen News!