தமிழ் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் சாதித்தவர் நடிகை கௌதமி. இவர் தற்போது தனிப்பட்ட வாழ்க்கையில் சட்டப் பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு சொத்து அபகரிப்பு சம்பவம் தற்போது அமலாக்கத்துறை (ED) விசாரணையாக மாறியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள நடிகை கௌதமி, தற்பொழுது அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி தனது விளக்கங்களை வழங்கியுள்ளார். நடிகை கௌதமி, கடந்த ஆண்டுகளில் தான் வைத்திருந்த சொத்துக்களை அபகரித்ததாக அழகப்பன் மீது புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, காவல் துறை முக்கிய விசாரணையை மேற்கொண்டது. விசாரணையின் போது அழகப்பன் மீது பல புகார்கள் வைக்கப்பட்டதனால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த சொத்து மோசடி வழக்கில் பண பரிமாற்றங்களும் உள்ளதென சந்தேகத்துடன், அமலாக்கத்துறை தற்பொழுது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Listen News!