• May 20 2024

கஜினி படத்திற்காக அசினுடன் மிரட்டலாக போட்டோஷூட் நடத்திய அஜித்.. மிரட்டல் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார்,  தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். மேலும் இவர் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் தீனா. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.


தீனா படத்தின் வெற்றிக்குப்பின் அஜித் - முருகதாஸ் கூட்டணி அமையவில்லை. ஆனால், கஜினி படத்தின் போது இந்த கூட்டணி மீண்டும் அமைவதாக இருந்தது.


ஆம், கஜினி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த சூர்யா இல்லை, அஜித் தான். அப்போது கஜினி படத்திற்கு மிரட்டல் என தலைப்பு வைத்திருந்தார். மிரட்டல் படத்திற்காக அஜித் மற்றும் அசினை வைத்து போட்டோஷூட் எல்லாம் எடுத்துள்ளார் முருகதாஸ். ஆனால், எதோ சில காரணங்களால் இப்படம் துவங்கவில்லை. இதோ அந்த புகைப்படங்கள்..


Advertisement

Advertisement