• Sep 19 2024

உடலிடை மெலிந்து மாஸ் காட்டும் அஜித்..! இனிதான் ஆட்டமே ஆரம்பம்! செம ட்ரெண்டாகும் புகைப்படம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

'விடாமுயற்சி' படப்பிடிப்பு பல சிக்கல்களை கடந்து பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

தனித்துவ இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இப்போதே ஹைப் எக்கச்சக்கமாக இருக்கின்றது..மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

'விடாமுயற்சி' படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இணைந்து  நடிப்பதாக கூறப்படுகிறது.


தற்போது அசர்பைஜானில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வகையில் தற்போது அஜித்துடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் உடல் எடை குறைந்து மிகவும் மெலிந்து போய்விட்டாரே என பேசிவருகின்றனர்.குறித்த புகைப்படம் இப்போது செம ட்ரெண்டிங்காக உள்ளது..

Advertisement

Advertisement