• Jan 19 2025

ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு அடித்தது லக்.. முதல்முறையாக சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும் விஜய், அஜித், சூர்யா, உட்பட பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பை இதுவரை அவர் பெறாத நிலையில் தற்போது அவருக்கு லக் அடித்துள்ளதாகவும் அவர் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் நடித்த நிலையில் அதன் பிறகு ’அட்டகத்தி’ படத்தில் அமுதா என்ற கேரக்டர் மூலம் திரையுலகில் பிரபலமானார். இதையடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் ’பண்ணையாரும் பத்மினியும்’ வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான’ காக்கா முட்டை’ உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மனிதன்’ தனுஷ் நடித்த ’வடசென்னை’ சிவகார்த்திகேயன் நடித்த ’கனா’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

 கடந்த 12 ஆண்டுகளாக அவர் திரையுலகில் இருந்தாலும் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் பல பேட்டிகளில் கூறியதுண்டு. இந்த நிலையில் அதற்கெல்லாம் சேர்த்து தற்போது பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



 பிரபல தயாரிப்பு நிறுவனம் கேஆர்ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் படத்தை தயாரித்து வரும் நிலையில், இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நாயகி என்றும் இந்த படத்தில் அவருக்கு அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் திரை உலக பிரபல நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து அவர் உற்சாகத்துடன் இருப்பதாகவும், கண்டிப்பாக இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement