• Dec 06 2024

ஜெயம் ரவியை அடுத்து படத்தில் இணையும் முக்கிய ஸ்டார்! சுதா கொங்கரா போடும் பெரிய திட்டம்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் சமீபத்தில் தீபாவளி பரிசாக அமரன் திரைப்படத்தில் நடித்து ரிலீஸ் செய்திருந்தார். ரசிகர்களிடத்தே அமோக வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் வசூலில் 100 கோடி தாண்டி வசூலித்து வருகிறது. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். 


அத்தோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டோ அல்லது அதற்கு நடுவிலேயோ சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.


இவர்கள் நால்வரையும் வைத்து லுக் டெஸ்ட் எனும் புகைப்படப் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார் சுதா கொங்கரா. நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் இது நடக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.  ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக தாடி மீசையுடன் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.


d_i_a

சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ஜெயம்ரவி அதர்வா ஆகியோரைம் இப்போது இருக்கும் தோற்றத்திலேயே நடிக்க வைத்துப் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறாராம். இந்த திரைப்படம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டது  என கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் இனி வரும் நாட்களில் குழுவினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


Advertisement

Advertisement