• Jan 19 2025

விஜய் பிறந்த நாள்: திமுக தரப்பில் இருந்து கப்சிப்.. அதிமுக தலைவர்களின் தொடர் வாழ்த்து..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

இன்று விஜய் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கியவுடன் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால் சில அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் அதே நேரத்தில் விஜய்யின் அரசியல், திமுகவை எதிர்த்து இருப்பதாக கூறப்படுவதால் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவினர் யாரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. 

ஆனால் அதே நேரத்தில் அதிமுகவின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்களது வாழ்த்துக்கள் இதோ:

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. விஜய்  அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பொதுவாழ்வில் இணைந்துள்ள திரு. விஜய் அவர்கள், பூரண நலமுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல! மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று‌ விடுவார்கள். திரைத்துறையினரும்  குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது!

கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல...

பாமர மக்கள் மீதான அதிகார‌ தாக்குதல்!

எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன்‌ குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும்! மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்: பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுப் பணியில் காலூன்றி உள்ள திரு. விஜய் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Advertisement

Advertisement