• Apr 26 2024

அதிதி ஷங்கர் காதலிக்கின்றாரா..? கூறிய பதிலைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை அதிதி ஷங்கர். இவர் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். 


அந்தவகையில் அதிதி சமீபத்தில் வெளிவந்த 'விருமன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

அறிமுகப் படத்திலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் என்றால் அது நம்ம அதிதி தான். 


இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'மாவீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிதியின் நடிப்பினைத் தாண்டி அவரின் நடனத்திற்கும் இனிமையான குரலிற்கும் பல ரசிகர்கள் அடிமையாகி இருக்கின்றனர். 

படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் அதிதி, அதில் அவ்வப்போது போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறார். 


'விருமன்' படத்தினைத் தொடர்ந்து பலரும் அதிதி ஷங்கரை பேட்டி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் தொகுப்பாளினி அஞ்சனா அதிதி ஷங்கரிடம் காதல் குறித்து சுற்றி வளைத்து பல கேள்விகளைக் கேட்டார்.

அதற்கு அதிதி ஷங்கர் பதிலளிக்கையில் "நான் காதலிக்கவில்லை. நான் ஷங்கர் மகள் என்று தெரிந்தால் எந்த ஒரு பையனும் என்கிட்ட வந்து பேச மாட்டார்கள். அப்பா நான் உன்னோட பொண்ணு பா" என்று அழகாக பதில் கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்தப் பதிலானது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனெனில் தங்களுடைய வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்கின்ற இந்தக் காலத்தில் அப்பாவின் மேல் அதிதி ஷங்கர் இந்தளவிற்கு மரியாதை வைத்திருப்பது வியக்கத்தக்க ஒரு விடயமாகும். 

Advertisement

Advertisement

Advertisement