தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதிதி. தன்னுடைய அறிமுகப் படத்திலேயே பல ரசிகர்களை கொள்ளை அடித்த பெருமையும் அதிதியையே சாரும்.
அந்தவகையில் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் நடித்த முதல் படமான விருமன் படம் பெரியளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் தான் வெளிவந்தது.
இதனையடுத்து மேலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அதிதியின் அப்பா ஷங்கர் முதலில் இவர் நடிப்பதற்கு தயக்கம் காட்டினாலும் பிறகு அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் தற்போது அதிதியின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது ஷங்கர் அதிதியிடம் இன்னும் இரண்டு வருடங்கள் மட்டும் படங்களில் நடித்து விட்டு, அடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட வேண்டும் என உத்தரவு போட்டிருக்கின்றாராம்.
இதற்கு அதிதியும் மறு பேச்சு பேசாமல் சரி என சம்மதித்தாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இது குறித்து இதுவரையும் எதுவுமே பேசாமல் இருந்து வந்த அதிதி சங்கர் முதல் முறையாக மனம் திறந்துள்ளார். அதாவது இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நான் உற்சாகமாக இருக்கிறேன். எனக்கு மாப்பிளை யார் என்று தெரிய வேண்டும்" எனக் குறிப்பிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Listen News!