• May 20 2024

ஆதித்த கரிகாலனின் போஸ்டரை அடித்து தூள் கிளப்பிய சோழா டீ விளம்பரம்..வைரலாகும் புகைப்படம்

tech / 1 year ago

Advertisement

Listen News!

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை, தற்போது திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இவர் வித்தியாசமான கதைகளை உலகிற்கு கொடுப்பதில் கை தேர்ந்தவர்.

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 வெளியாக உள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது லைகா நிறுவனம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ராஜராஜசோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். குதிரைமீது ஆதித்த கரிகாலன் அமர்ந்து செல்வதாக உள்ள போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகின்றது.

இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. அதே சமயம் விக்ரமின் இன்னொரு புகைப்படமும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது விக்ரம் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவுக்கு நுழைந்தவர் சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நாட்களில் டப்பிங் கொடுப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என இருந்தார். அப்படி சோழா டீ என்ற விளம்பரத்தில் நடித்தார். அதில் ராஜா கெட்டப்பில் விக்ரம் இருந்தார்.

தற்போது ஆதித்த கரிகாலன் கெட்டப்பில் இருக்கும் பொன்னியின் செல்வன் விக்ரம் புகைப்படத்தையும், விளம்பரத்தில் அவர் மன்னன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை வைரலாகி கொண்டாடி வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement