• Jan 18 2025

மாஸ் என்றி கொடுத்த நடிகை திரிஷா! GOAT படத்தில் நடனம் ஆட வாங்கிய சம்பளம்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தியுளார் நடிகை திரிஷா. அதுவும் 'மட்ட' எனும் பாடலில் தான் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது. ஆனால், அந்த லிரிகள் பாடலில் திரிஷாவை தவிர்த்துவிட்டு வெளியிட்டனர். 


இப்படியிருக்க மட்ட பாடலில் திரிஷாவின் என்ட்ரி திரையரங்கேயே அதிர வைத்தது. GOAT படத்தில் குறிப்பாக கில்லி படத்தில் வரும் நடனத்தை விஜய்யும், திரிஷா இணைந்து ஆடியதை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலில் விஜய்யுடன் இணைந்து நடனமாடிய திரிஷா ரூ. 5 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement