• Jan 19 2025

நடிகை த்ரிஷா எனது மனைவி.. விக்ரமுக்கு டெத் கன்பார்ம்! விஜய் மீதும் பழிபோட்டு திட்டிய சூர்யா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் விஜய், த்ரிஷா, விக்ரம் போன்ற நட்சத்திரங்கள் குறித்து மோசமாக பேசி பிரபலமானவர் தான் AL சூர்யா.

அதிலும் குறிப்பாக நடிகை த்ரிஷா எனது மனைவி என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியவர்.

அத்துடன் நடிகர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை மோசமாகவும் பேசி வந்தார். அது போலவே நடிகர் விக்ரம் விரைவில் மரணம் அடைந்து விடுவார் என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார்.

ஆனால் அவர் இப்படி கூறும் விஷயங்கள் அதிர்ச்சி கொடுக்கும்  வகையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும் காணப்பட்டாலும்  ரசிகர்கள் பலரும் இவர் கூறும் விஷயங்களை மகிழ்ச்சியாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். இவர் பேசும் விதமும் மீம்  மெட்டிரியலாக மாறிவிட்டது.


இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தொடர்பில் சமீபத்தில் அவர் கூறிய விஷயம் ஒன்று மிகவும் பேசுபொருளாகியுள்ளது.

அதாவது, தனக்கான விளம்பரத்தை தேடிக் கொள்ள மட்டும் தான்  நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். கொரோனா காலத்தில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் என்ன செய்தார்? மக்கள் பணத்தில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய் அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதை செய்யவில்லை என்றால் உண்மை முகம் வெளியே வந்திடும் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறு AL சூர்யா இப்படி கூறிவரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் செய்த நிவாரண உதவிகளை பற்றி சமூக வலைதளத்தில் பதிவுகளை பதிவு செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement