• Oct 05 2024

நடிகை சுனைனா திருமணம் செய்ய போவது துபாய் யூடியூபரா? வைரல் புகைப்படம்.!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை சுனைனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவரை திருமணம் செய்ய போவது துபாய் சேர்ந்த யூடியூபர் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,

தமிழ் சினிமாவின் நடிகைகளின் ஒருவரான சுனைனா, பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் ’காதலில் விழுந்தேன்’ முதல் அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை  சுனைனா    சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் ஒரு ஆணின் கையுடன் தனது கையை இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக மறைமுகமாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



இருப்பினும் சுனைனாவை திருமணம் செய்யப்போவது யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்துக் கொண்டே இருந்த நிலையில் தற்போது துபாய் சேர்ந்த யூடியூபர் காலில் அல் அமெரி என்பவர் தான் சுனைனாவை திருமணம் செய்ய போகிறவர் என்று கூறப்படுகிறது.

மேலும் அவருடைய புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை சுனைனா விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement