தென்னிய சினிமாவில் இதுவரை 260ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த வகையில் இவர் வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமாகினார்.
தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். கவர்ச்சிகரமாக நடிப்பது ஐட்டம் டான்ஸ் ஆடுவது என அன்றைய ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்து வைத்திருந்த இவர். படையப்பா படத்தில் நீலாம்பரி வேடத்திற்காக பல விருதுகளை பெற்றிருந்தார்.இது தவிர கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி பார்ட் 1, பார்ட் 2 இரண்டிலுமே கலக்கி இருந்தார்.
ராஜமாதா சிவகாமி தேவிகா வந்து ரசிகர்களின் மனதில் குடிகொண்டு விட்டார் ரம்யா கிருஷ்ணன். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் நடித்த வருகிறார். இறுதியாக இவர் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகி இருந்த லிகர் படத்தில் நாயகனின் தாயாக வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையே ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தோன்றி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். 52 வயதாகும் இவர் தற்போது வண்ண வண்ண உடைகளில் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருவதைக் காணலாம்.
Listen News!