• Jan 19 2025

முதன் முறையாக இலங்கை வரும் நடிகை ரம்பா... ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள்... எதற்காக வருகிறார் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தென் இந்திய நடிகை ரம்பா இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளாராம். எதற்காக இலங்கை விஜயம் செய்கிறார். எப்போது வருகிறார் என பல ரசிகர்களும் எதிர்பாத்து இருக்கிறார்கள். அது தொடர்பாக பார்ப்போம் வாங்க.


இந்திய திரையுலகில் திறமையான பாடகர்களில் ஒருவர் ஹரிஹரன். இவர் பாடகர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் ஆவார். மேலும் இவருடைய குரலில் வெளிவந்த அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி என பல சூப்பர்ஹிட் பாடல்களை நாம் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம்.


பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தும் இவர் இந்த முறை வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் மிக பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடாத்தயுள்ளார்.  இது முற்றிலும் ரசிகர்களுக்கு இலவசமாக நடத்தப்பட்டும் நிகழ்ச்சியாகும். இதற்கான டிக்கெட்ஸ், இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.


SLIIT Northern UNI நடத்தும் இந்த நிகழ்ச்சி வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், MagicK group Sponsor செய்ய யாழ் வருகையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.     


மேலும் கலா மாஸ்டர் இந்த நிகழ்ச்சிக்காகவே இலங்கை வருகை தந்து சிறந்த நடன குழுக்களை தெரிவு செய்திருந்தார். இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு நடிகை ரம்பா சிறப்பு விருந்தினராக வர உள்ளாராம், இந்த நிகழ்ச்சியை ரம்பாவின் கணவர் தான் நடத்தவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.


மேலும் ரம்பா முதன் முறையாக இலங்கைக்கு வரவுள்ளதாகவும்  இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் Inauguration வரும் டிசம்பர் 14ம் தேதி நடக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  இவர்களோடு இன்னும் பல பிரபலங்கள் இந்த இசை நிகழ்ச்சிக்கு வருகைதரவுள்ளனர். 


Advertisement

Advertisement