தமிழ் சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் விஜய் ஆண்டனி.இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும் கதாநாயகனாக 2012ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இதனைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார். இது தவிர சில திரைப்படங்களில் டப்பிங் ஆட்டிஸ்டாகவும் பணி புரிந்து இருக்கின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ள இவர் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். அது மட்டுமல்லாமல் அக்னி சிறகுகள் என்னும் படத்தில் நடித்து வருகின்றார் . இதில் இவருடன் அக்சரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் கொலை. த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் பாலாஜி குமார் இயக்குகிறார். இந்த படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் தி பாஸ் என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறார். அது குறிப்பிட்ட போஸ்டரை தான் பட குழு வெளியிட்டுள்ளது. அதில் ராதிகா கையில் சிகரெட்டுடன் பயங்கரமாக போஸ் கொடுத்திருக்கிறார்.
தற்போது ராதிகாவின் இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஒரு மாதம் கழித்து நயன்தாராவின் திருமணப்புகைப்படங்கள் வெளியாக இது தான் காரணமா?- இப்படி ஒரு மாஸ்டர் பிளான் இருந்ததா?
- கடுங் கோபத்தில் கூல் சுரேஷை அடிக்கப் பாய்ந்த நடிகர் மன்சூர் அலிகான்- அட இது தான் காரணமா?
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!