• Apr 28 2024

கார்த்தி 25 பிரமாண்ட நிகழ்ச்சி... தீபாவளி முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் ஜப்பான்... படம் இப்படி தான் இருக்கு- தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கருத்து...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

ஜப்பான் திரைப்படத்தின் இயக்குனர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது ஜப்பான் திரைப்படம் தொடர்பாகவும், அதன் ரிலீஸ் தொடர்பாகவும், கார்த்திக் 25 நிகழ்ச்சி தொடர்பாகவும் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.


ஜப்பான் திரைப்படம் எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு ஆக்டோபர் 10 ஆம் திகதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜமுருகன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நடிகர் கார்த்திக் அவர்களுடைய 25 வது படம். 


நடிகர் கார்த்தி அவர்களுடைய 25 படங்களில் பயண தொகுப்பாக  மிக பிரமாண்டமாக நேரு அரங்கில் கார்த்தி 25 என்ற நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை 28ம் திகதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நிகழ்வில் எங்கள் சினிமா வாழ்வில் இவ்வளவு நாள் தொடர்ந்து வந்த ஊடகங்களையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.


மேலும்  படம் குறித்து  ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு தயாரிப்பாளர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.   ஜப்பான் என்கிற படம் காமடியான திரைப்படம் பொலிட்டிகள் திரைப்படம் கிடையாது. பல விஷயங்களின் கலவையாகவே இத்திரைப்படம் இருக்கும். 


தீபாவளி குறித்து வெளியாவதால் குடும்பத்தினருடன் இருந்து பார்த்து மகிழக்கூடிய திரைப்படம். பத்திரிகையாளராக இருந்த இயக்குனர் ராஜ முருகனின் கண்ணோட்டத்தில் ஒரு சமூக செய்தியை கூறுவதாக அமையும். முகம் சுளிக்க கூடிய வன்முறை காட்ச்சிகள் இல்லை, சென்சார் பிரச்சினை பெரிதாக பாதிக்காது படம் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement