• Nov 09 2024

கணவருடன் ட்ரிப் சென்ற சீரியல் நடிகை... வெளியான கியூட் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் அறிமுகமானவர்தான்  நடிகை ஷபானா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பல வருடங்களாக  ஷபானா செம்பருத்தி சீரியலில் நடிகையாக நடித்திருந்தார்.

செம்பருத்தி சீரியலின் ஆரம்பத்தில் கார்த்திக் ராஜ் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் திடீரென்று அவர் சீரியலில் இருந்து விலகிய பிறகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு  குறைந்தது. அந்த சீரியல் முடிவடைந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற சீரியலின் மூலமாக என்ட்ரி கொடுத்தார் நடிகை ஷபானா.


300 எபிசோடுகளை கடந்த பிறகு இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்திருந்தார். அதற்கு காரணம் தனது பியூச்சர் வாழ்க்கைக்காக எடுத்த முடிவு தான் வேறொன்றும் இல்லை எனவும் சீக்கிரமாகவே இன்னொரு பெரிய ப்ராஜெக்ட்டில் உங்களை சந்திக்கின்றேன் என்றும் விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனது காதல் கணவருடன் பாலிக்கு ட்ரிப் சென்ற  நடிகை ஷபானா, அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Gallery

Gallery

Gallery

Advertisement

Advertisement