• Sep 20 2024

கேள்வி கேட்ட ரசிகருக்கு நச் என பதில் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்.. பதிவு இதோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவற்றைத் தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

இவ்வாறு இருக்கையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் பேசி வருவது சகஜம் தான்.அப்படி நடிகை மாளவிகா மோகனனும் சமீபத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் என உரையாடி வந்துள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனிடம் தவறான முறையில் கேள்வி ஒன்றை கேட்டு இருந்தார்.

அதில் " மாளவிகாவின் ரசிகர்கள் என கூறுபவர்கள், நீங்கள் பதிவிடும் புகைப்படங்களை காண மட்டும் தான் உங்கள் ரசிகர் என கூறிக் கொள்கிறார்கள் " என்று அந்த ரசிகர் கேட்டுள்ளார்.

இதற்கு நடிகை மாளவிகா " எனக்கும் அது தெரியும், அப்படி என்றால் நீங்களும் என்னுடைய புகைப்படத்தை பார்ப்பதற்காக தான் வந்தீர்களா " என கூறி அந்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement