• Jan 19 2025

சூர்யா, விஷால் செய்தது போல பண்ணியிருக்கலாமே, இது எல்லாம் ஒரு கொள்கையா?- அஜித்தை மோசமாக வறுத்தெடுத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது.

தீவுத்திடலில் இருந்து மதியம் 2.30 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் அவரது உடல் நேற்றைய தினம் அடக்கம் செய்யப்பட்டது.


சாலையின் இரண்டு புறமும் திரண்டு இருந்த மக்கள் ஒரு முறையாவது புரட்சி தலைவரின் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் வாகனத்தின் பின்னால் ஓடிவருவதை பார்க்க முடிந்தது.  விஜயகாந்த் மறைவுக்கு பல நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜித் பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

விஜயகாந்தின் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கதறிக்கொண்டு இருக்கும் போது அஜித் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார் வலைப்பேச்சு பிஸ்மி. அஜித் சினிமாவிற்கு வந்த போது என்னென்ன பிரச்சனையில் சிக்கினார் அதற்கு நல்லாம் பஞ்சாயத்து செய்தவர் விஜயகாந்த் தான். 


சூர்யா, விஷால் எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் வீடியோவில் இரங்கல் தெரிவித்து இருக்கார்கள். அப்படி கூட வீடியோ போட வேண்டாம் ஒரு நாலு வரியில் இரங்கல் தெரிவித்து இருக்கலாமே இதெல்லாம் ஒரு கொள்கையா? பைக் டூர் கம்பேனி தொடங்கியதாக அறிக்கை வெளியிட தெரிந்தவருக்கு விஜயகாந்திற்கு அறிக்கை வெளியிடத்தெரியாத என்று பிஸ்மி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.


Advertisement

Advertisement