குரு சிஷ்யன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை கௌதமி. இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபலம் ஆனார். தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து சில காலம் நடிக்காமல் இருந்த கௌதமி, 2015 ஆம் ஆண்டு வெளியான பாபநாசம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அவருக்கு ஜோடியாக கமலஹாசன் நடித்திருந்தார்.
சினிமா துறையில் மட்டும் இல்லாமல் சீரியல் தொடர்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன்படி இந்திரா, அபிராமி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கியுள்ளார்.
சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் நடிகை கௌதமி. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
இந்த நிலையில், நடிகை கௌதமி தனியார் youtube சேனல் ஒன்றுக்கு தனக்கு ஏற்பட்ட கேன்சர் பற்றி மனம் திறந்து உள்ளார். அதன்படி அவர் கூறுகையில், எனக்கு கேன்சர் என்று தெரிய வந்ததும் என் மகனுக்காக நான் அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
வாழ்க்கையில் யார் நம்முடன் இருக்கின்றார்கள் யார் எம்மை விட்டுப் போகின்றார்கள் என்பதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலைப்பட நேரம் இல்லை. அந்த நேரத்தில் என் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒரே ஒரு விஷயம் எனது மகள். நான் இல்லை என்றால் எனது மகளுக்கு வேறு யாரும் இருக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரிந்ததால் நான் கேன்சரை எதிர்த்து போராடினேன் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!