• Apr 17 2026

பிக் பாஸ் விசித்ராவுக்கு புதிய பட்டம் வழங்கிய நடிகை அம்மு ராமச்சந்திரன்! அது என்ன தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 18 போட்டியாளர்கள், 2 வீடு, 5 வைல்ட் கார்ட் என்ட்ரி என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது தான் பிக் பாஸ் சீசன் 7.

இதில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் நடிகை விசித்ராவும் ஒருவராக காணப்படுகிறார். பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணுவதற்கான வாய்ப்புகள் நடிகை விசித்ரா இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அவர்  கடந்த வாரம்  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ராவுக்கு அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்த வீடியொ தற்போது வைரலாகி வருகிறது.


மேலும், விசித்ராவிற்கு வாழ்த்து கூறுவதற்காக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்சியின் டைட்டில் வின்னர் அசீம், நடிகை அம்மு ராமச்சந்திரன், ரித்விகா போன்ற நடிகைகள் அவரின் வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளனர்.

இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விசித்ராவின் வீடியோவை பகிர்ந்த அம்மு ராமச்சந்திரன், பிக் பாஸ் 7 லயன் லேடிக்கு அன்பான வரவேற்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து பலரும் விசித்ராவை "லயன் லேடி" என்று அழைத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement