செல்வமாகவும் வேகமாகவும் மாறும் சினிமா உலகில், 80களின் தொடக்ககாலத்திலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழித் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர். இந்த நிலையில்தற்போது இவர் சில சீரியல்களில் நடித்து வருகின்றார்.இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது இவர் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சமூக ஊடகங்களில் தான் அணிந்த உடைகள் மற்றும் உடல் தோற்றம் குறித்து வரும் விமர்சனங்களை அவர் எதிர்த்தார். “நான் ப்ரைட் கலர் போட்டா, 'இந்த வயசுல இப்படி'ன்னு சொல்றாங்க. ஏன் நாம கலர் அணியக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் கூறும் போது திரைப்படத்துறையில் பெண்கள் குறித்த நிலைப்பாடுகள் மீது விமர்சனம் செய்த அம்பிகா, “ திருமண பெரிய ஹீரோக்களுக்கு 17 வயசு ஹீரோயின்கள் நடிக்கிறாங்க. அதை யாரும் கேள்வி கேட்கல. ஆனா நாங்க பெரியவங்க ஆகிட்டோம்னா உடனே ‘ஏன் நடிக்குற’ன்னு கேட்கறாங்க” எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து தன் வாழ்வில் ஏற்பட்ட உடலியல் மாற்றங்களை அவர் மிக திறந்தமையுடன் பகிர்ந்தார். “பிறந்ததுக்கப்புறம் உடல் மாறுது – இது தான் நிஜம். இதுல நியாயமில்லாத நிந்தனை ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அம்பிகா தன் திரையுலகப் பயணத்தை நினைவுகூர்ந்தபோது, “எனக்கு யாரும் காட்பாதர் இல்ல. ஸ்ரீதேவிக்குத் பாரதிராஜா சார் இருந்தார். எனக்கு யாரும் யாரும் சப்போர்ட் பண்ணல” என்று உணர்வுபூர்வமாக கூறினார்.
“நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் தோற்றம், வயது, உடல் எதையும் வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக்கூடாது. நம்மை நாம் மதிக்கணும். நம்மை நாமே அழகா பாக்கணும்” என்றார்.
அம்பிகாவின் நேர்மையான பேச்சு சமூகத்தில் பலருக்கும் தன்னம்பிக்கையையும், புரிதலையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பார்வை, பெண்கள் மற்றும் மதிப்பீட்டின் மீதான புரிதலை மாற்றக்கூடிய ஒரு எண்ணத்தோன்றலாக பார்க்கப்படுகிறது. என்று கூறிய விடயம்
Listen News!