• Apr 28 2026

வேறலெவல் வைப்.! புடவையில் மெர்சல் காட்டும் நடிகை ஆதிரை.. - வைரலான வீடியோ

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

மகாநதி சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஆதிரை, தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியான தோற்றத்தாலும் எப்போதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கிறார்.


கடந்த வருடம் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 9-ல் போட்டியாளராகக் கலந்துகொண்ட ஆதிரை, மூன்றாம் வாரத்திலேயே எலிமினேட் ஆனார். ஆனால், அதனோடு நிறுத்திக்கொள்ளாமல் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் வீட்டினுள் நுழைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த தைரியமான மனோபாவம் அவரது ரசிகர்களிடையே மேலும் பிரபலத்தை ஏற்படுத்தியது.

சீரியல், ரியாலிட்டி ஷோ என இரண்டிலும் பங்கேற்ற இவர், அதோடு இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட்கள் நடத்தி வரும் ஆதிரை, தனது ஸ்டைல் மூலம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெறுகிறார்.

இந்த நிலையில், தற்போது அவர் சாறியில் தோற்றமளித்த வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வைரலாகியுள்ளது. அழகான சேலை அணிந்து கம்பீரமாகத் தோற்றமளிக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement