தமிழ் சினிமாவில் தற்போது பழைய படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருவது டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் 1994ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படம் மீண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சத்யராஜ் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரும் கலந்துகொண்டு வருகின்றனர். இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துகளும் அனுபவங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அமைதிப்படை படத்தில் அமாவாசை என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் அசத்தியிருப்பார். அரசியல் கலந்த நகைச்சுவை படமாக அந்த படம் காணப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் அமைதிப்படை எடுக்கப்பட்டபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை சத்யராஜ் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், "அந்த படம் எடுக்கப்பட்டபோது கஸ்தூரி கிணற்றில் குளிக்கும் சீன் ஒன்று இருந்தது. இதன்போது மணிவண்ணன் என்னிடம் கஸ்தூரி குளிக்கும்போது அந்த அழகை பார்த்து ரசிக்குமாறு கூறினார். அது எனக்கே பிடித்த க்ளோஸப் சீனாக மாறிவிட்டது" என்று கூறியுள்ளார்.
தற்போது சத்யராஜ் தெரிவித்த கருத்தை பலர் நகைச்சுவையாக எடுத்தாலும், சிலர் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் வழங்கிய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!