• Sep 20 2024

நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட நடிகை ஆர்த்தி-நடந்தது இது தானாம்-மிரண்டு ஓடும் நெட்டிசன்ஸ்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். சென்னையை அடுத்த மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் பல கோடி ரூபாய் செலவில் அவர்களின் திருமணம் பிரமாண்டமாய் நடைபெற்றது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் அத் திருமணத்தில் பங்குகொண்டனர்.. நயன்தாரா தனது திருமணத்தில் சிவப்பு நிற எம்பிராய்டரி சேலை அணிந்திருந்தார். அதில் கர்நாடக கோவில்களில் இடம்பெற்ற கலை வடிவங்கள் எம்பிராய்டு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் நயன்தாரா அணிந்திருந்த ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் கதையை சொல்லும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.அத்தோடு வட இந்தியர்களால் டிசைன் செய்யப்பட்ட நயன்தாராவின் சேலை பல லட்சம் ரூபாய் மதிப்புடையது என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இதேபோல் நயன்தாரா அணிந்திருந்த நகைகள் குறித்த தகவலும் பிரமிக்க வைத்தது. வைடூரியம், வைரம் மற்றும் மரகத கற்களால் ஆன நகைகளை அணிந்து ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றார். இந்த நகைகளின் மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் நகைச்சுவை நடிகையான ஆர்த்தி கணேஷ், நயன்தாராவின் திருமண கோலத்தை இமிட்டேட் செய்துள்ளார். அத்தோடு சிவப்பு நிற எம்பிராய்டரி சேலை, அதை போன்ற ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட், அவர் அணிந்திருந்ததை போன்றே நகைகள் என மொத்தமாக அவரை போன்ற கெட்டப்பில் திணறடித்துள்ளார்.

எக்ஸ்பெக்டேஷன் அன்ட் ரியாலிட்டி… என்ன கொடுமை சார் இது? நயன் மாம் சொறி என நகைச்சுவையாக கேப்ஷன் கொடுத்துள்ளர் ஆர்த்தி. இந்த இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் க்யூட், நைஸ் என புகழ்ந்திருந்தாலும், பலர் அய்யய்யோ முடியலம்மா என ஓட்டம் பிடித்துள்ளனர். ஆர்த்தி நகைச்சுவையாக வெளியிட்டுள்ள இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement