• May 21 2024

திடீரென முதலமைச்சரை சந்தித்த நடிகர் விஜய்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் பீஸ்ட். இப் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

வம்சி இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று விஜய் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்.

மேலும் இசு் சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்கிற விவரம் வெளிவரவில்லை. மரியாதை நிமித்தமான் சந்திப்பு என முதலமைச்சர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்து உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி முதல்வர் வந்து விஜய் வீட்டில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement