• Jan 18 2025

நடிகர் உதயநிதி துணை முதல்வர் ஆனதும் மாறிவிட்டார்..! ரோபோ சங்கர் அதிரடி...!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பல காமெடி ஷோக்களில் காமெடி நடிகராகவும் இருந்து பிரபலமானவர் ரோபோ சங்கர். இவரின் முயற்ச்சிக்கு கிடைத்த பலம் தான் மாரி, சிங்கம் , விஸ்வாசம் போன்ற பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடிக்க கிடைத்தது. வெள்ளி திரையில் தவிர்க்க முடியாத ஹீரோவானார். இந்த நிலையில் ரோபோ சங்கர் துணை முதலவர் உதய நிதியை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். 


உதயநிதியிடம் ஆரம்பத்தில் ஒரு நல்ல நெருக்கம் இருந்தது. மிகவும் ஜாலியாக பேசுவேன். திடீரென துணை முதல்வரானார் என்ற செய்தி கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் எனக்குள்ள ஒரு சிறு தயக்கம் இருந்தது. முன்பு மாதிரி அவரிடம் பேச முடியுமா? பழக முடியுமா?என்று ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.  

d_i_a

மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக அங்கு போகலாமா என்ற சந்தேகத்துடன் உதய நிதியின் போனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் ‘பாப்பாவுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். உங்களுக்கு பத்திரிக்கை வைக்கனும். உங்களுக்கு போன் பண்ணும் போதெல்லாம் சுவிட்ச் ஆஃப்னு வருது.


அதான் இந்த வாய்ஸ் மெசேஜ் அனுப்புறேன்’ என்று என்று சொல்லி இருந்தேன். எந்தவொரு சாதாரண மனிதனும் இந்த மாதிரி அனுப்பும் போது ‘ஓ அப்படியா? சரி வாங்க’ அப்படித்தான் சொல்வான். ஆனால் உதய நிதியும் பதிலுக்கு வாய்ஸ் மெசேஜில் ‘என் போன் சுவிட்ச் ஆஃப்ல இருக்கும் போது ஏன் போன் பண்ணீங்கனு’ பதிலுக்கு சொல்லி அனுப்பினாராம். அந்தளவுக்கு அதே எதார்த்தத்துடன் தான் உதய நிதி இருக்கிறார் என ரோபோ சங்கர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement