• May 20 2024

ஷங்கரின் மகள் அதிதி அடுத்து ஜோடி சேரப் போகும் நடிகர் சிவகார்த்திகேயனா?- அதுவும் என்ன படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கே உரித்தான பாணியில் பிரமாண்டமாக திரைப்படங்களை இயக்கக் கூடிய இயக்குநராக வலம் வருபவர் தான் ஷங்கர். இவர் தமிழில் நடிகர் விஜய் ரஜினி கமல் என பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார்.

அந்த வகையில் தற்பொழுது தெலுங்கு நடிகரான ராம்சரணை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்கி வருகின்றார்.

மேலும் இவரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெறுகிறது.

https://twitter.com/ShanthiTalkies/status/1554692169776381952

இந்நிலையில் தற்போது அதிதி ஷங்கரின் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள முக்கிய திரைப்படம் மாவீரன்.இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement