• Apr 27 2024

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட முக்கிய காட்சி…வெளியிட்ட விஜய் டீவி…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபல சேனல்களில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. இங்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிற்கு என்றே பெரியளவிலான ரசிகர் கூட்டம் உண்டு. நிகழ்ச்சிகள் மட்டுமன்றி அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களும் இலகுவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள்.

அந்த வகையில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை போன்றே விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி. இதன் மூன்றாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் வெற்றியீட்டி சீசன் 3இன் டைட்டிலை கைப்பற்றி இருக்கின்றார் நடிகை ஸ்ருதிகா.

பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஒரு நிகழ்வு மட்டும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

அது என்னவெனில் கோமாளிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் விருது வழங்குகின்ற அந்தக் காட்சி மட்டும் ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்திருந்தனர். அதாவது நிகழ்ச்சியின் நீளம் காரணமாக எடுக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்வின் வீடியோவை ஒளிபரப்பு செய்யவில்லை என சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த காட்சியை பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் பலரும் கவலையில் இருக்கும் நேரத்தில் தற்போது கோமாளிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் விருது வழங்கிய வீடியோவை விஜய் டீவி எக்ஸ்குளுசிவ் வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement