• Apr 26 2024

நம்ம 'சச்சின்' சாளினியா இது..? 2குழந்தைக்கு அம்மா மாதிரியே தெரியலையே..புடவையில இப்பிடி ஜொலிக்கிறாங்களே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

குறும்புத்தனம் நிறைந்த தனது நடிப்பினாலும், அழகினாலும் தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட ஒருவரே நடிகை ஜெனிலியா. சிறந்த மாடலாக விளங்கிய இவர் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமானார். ஆரம்பத்தில் இவர் அமிதாப் பச்சனுடன் பார்க்கர் பென் விளம்பரத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார்.

நடிப்பு வாழ்க்கையில் இவரது பயணம் 2003 இல் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்ற படமான 'துஜே மேரி கசம்' மூலம் தொடங்கினார். அதுமட்டுமல்லாது அதே ஆண்டு 'பாய்ஸ்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். இவ்வாறு தமிழ் சினிமாவில் கால் பதித்த இவர் 2003-2012 காலகட்டத்தில் பல தெலுங்குப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த ஜெனிலியா பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். அதிலும் குறிப்பாக 2006-ஆம் ஆண்டு 'பொம்மரிலு' என்ற தெலுங்கு காதல் கதைக்களத்தை கொண்ட படத்தில் நடித்ததற்காக ஜெனிலியா தனது முதலாவது பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

இந்தப் படமானது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. தமிழில் ரீமேக் ஆன இதே படத்திலும் ஹீரோயினாக இவரே நடித்து தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இவ்வாறு சினிமாவில் தனது சாதனையை நிலைநாட்டிய இவர் குடும்ப வாழ்க்கையிலும் கால் பதித்திருக்கின்றார். இவருக்கு 2 மகன்களும் உள்ளனர். திருமணம் ஆகியும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருவார்.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இவ்வாறே இவர் தற்போதும் நீல நிற உடையணிந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு இருக்கின்றார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement