• May 09 2024

பிக்பாஸ் ரசிகர்கள் அடம்பிடிக்கும் அந்த சர்ச்சை நடிகர்-கேட்டா ஆடிப்போயிடுவீங்க..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்கு சர்ச்சை நபரை அழைத்து வருமாறு  ரசிகர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.பிக் பாஸ்  வீட்டிற்கு அந்த நபர் மட்டும் வந்தால் டிஆர்பி எகிறிவிடும் என்கிறார்கள் ரசிகர்கள்.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. தேதியை குறிப்பிடாவிட்டாலும் வேட்டைக்கு ரெடியா என்று கேட்டு இரண்டு ப்ரமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் போட்டியாளர்கள் பற்றி வழக்கம் போன்று இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இவ்வாறுஇருக்கையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வருமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உங்களுக்கு தைரியம் இருந்தால் பயில்வானை அழைத்து வாங்க பிக் பாஸ். அவர் மட்டும் வந்தால் டி.ஆர்.பி. எங்கோ சென்றுவிடும். நாங்களும் ரொம்ப எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.



வி.ஜே. அர்ச்சனாவும், வி.ஜே. மகேஸ்வரியும் பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தான் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிவிட்டார் அர்ச்சனா என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

அத்தோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கி மற்றும் அஸ்வினை பிக் பாஸ் 6 வீட்டிற்கு அழைத்து வருமாறும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவாங்கி வந்தாலும் வரலாம் ஆனால் அஸ்வின் வர வாய்ப்பே இல்லையாம். அஸ்வின் பெயர் உறுதி செய்யப்படும் முன்பே அவர் பிக் பாஸ் வீட்டிலும் தூங்கிவிடுவார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

Advertisement

Advertisement

Advertisement